அனோஜனைப் போன்று ஞானசார தேரரையும் விடுதலை செய்யவும்
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் என்ற இளைஞரை விடுதலை செய்தது போன்று பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் தனது இடத்தை ஞானசார தேர்தலையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
அனோஜனை விடுதலை செய்வது தொடர்பில் அரசாங்கம் சாதகமான தலையீடு செய்தமை வரவேற்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய நாடு என்றாலும் இஸ்லாமிய மதத்தை அவதூறு செய்திருந்த போதிலும் ஜனாதிபதி அநுரவின் கோரிக்கையை ஏற்று அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ய சவுதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த நாடான இலங்கையில் ஞானசார தேரருக்கும் அதே குற்றச்சாட்டு தான் சுமத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த நாட்டின் ஜனாதிபதியான அநுரகுமாரதுசாநாயக்க, மத்திய கிழக்கு நாடு ஒன்றில் மன்னரிடம் அனோஜனுக்காக கோரிக்கை விடுக்க முடியுமாயின், இலங்கையில் அதே குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஞானசார தேரருக்கும் மன்னிப்பு வழங்க முடியுமல்லவா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மதத்தை இழிவு படுத்திய ஒருவருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியே வேண்டுகோள் விடுத்த காரணத்தினால் இலங்கையில் அவ்வாறு செய்யாதிருக்க ஜனாதிபதியால் முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது ஞானசார தேரர் விவகாரத்தில் சாதகமான முறையில் ஜனாதிபதியினால் தலையீடு செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அவ்வாறு செய்யத் தவறினால் அது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டி உள்ளார்.