துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண் போதைப்பொருள் வியாபாரியா? பொலிஸார் பகீர் தகவல்
புத்தளத்தில் மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் நேற்று (22) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
போதை வியாபாரம்
மாரவில , நாத்தாண்டிய பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் தனது மகனுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த 30 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் 10 வயதுடைய மகன் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிநைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண்ணின் கணவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.