இலங்கையில் பெரும் சோக சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பப் பெண்!
புத்தளம் - மன்னார் வீதியின் 4ஆம் கட்டை பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 28 வயதுடைய பாபு துஷ்யந்தினி எனும் 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் நேற்றிரவு (09-07-2024) சாப்பாட்டுக்காக ரைஸ் குக்கரில் சோறு சமைப்பதற்காக தயாரான போது திடீரென மின்சாரத் தாக்கி உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த பெண்ணை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.
மேலும், உயிரிழந்த இளம் தாயின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.