யாழில் திருமணமாகி 4 மாதங்களேயான இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் திருமணமாகி 4 மாதங்களேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
27 வயதான சுகிர்தராசா நிதர்சினி என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தெல்லிப்பழை - மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்றையதினம் (16-07-2023) வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் நேற்றையதினம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் இன்றையதினம் (17-07-2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதன்பின்னர் அவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி திரு. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.