கட்டிப்புடி வைத்தியத்தில் கமல்ஹாசனை மிஞ்சிய இளைஞர்!
கட்டிப்பிடி வைத்தியம் கமல்ஹாசன் படத்தில் சொல்ல கேட்டிருப்போம். எனினும் ஒருவரை கட்டியணைப்பதால் அவர்களின் மன அழுத்தம் குறைந்து ஆக்டிவாக செயல்படுவார்கள் என்றும் மருத்துவ உலகத்தாரால் தெரிவிக்கப்பட்டு வருவதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் அப்படியான கட்டியணைப்பையே ஒருவர் தனக்கான தொழிலாகவே மாற்றியிருக்கிறார் என்பதுதான் கூடுதல் தகவல் .
இங்கிலாந்தில் வசிக்கும் கனடா நாட்டைச் சேர்ந்த 30 வயது இளைஞரான Trevor Hooton என்பவர்தான் cuddling என்பதை தொழில்முறையாகயே கொண்டிருக்கிறார்.
இதற்காக 75 பவுன்ஸ் வசூலிக்கிறாராம். இதுபோக, உறவுச்சிக்கல்களை தீர்க்கவும், பலமான உறவை வளர்த்துக்கொள்ளவும் கனெக்க்ஷன்ஸ் கோச்சிங் என்ற சேவையும் Trevor Hooton வழங்குகிறாராம்.
இதுதொடர்பாக The Independent தளத்திடம் பேசிய அவர், கட்டியணைப்பதை தாண்டி, தொடுதலின் மூலம் ஒருவருக்கு அன்பு, பாசம் மற்றும் அக்கறையும் கொடுப்பதாக கூறியிருக்கிறார்.
இந்த சேவை எல்லாராலும் புரிந்துக்கொள்ள முடியாது. சிலர் அதனை தவறாக புடிந்துகொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் மனித உறவுகளை உருவாக்குவதற்கான எனது ஆர்வத்தின் அடிப்படையில் இதனை ஒரு தொழிலாகவே உருமாற்றிக் கொண்டதாக கூறும் Trevor Hooton, இதை உருவாக்கத்தான் பலரும் போராடுகிறார்கள்.
அதனால்தான் இந்த சேவையில் நான் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இது அரவணைப்பை விட தேவையானவர்களுக்கு உரியதை கொடுப்பதாகும். இந்த முறையின் மூலம் முகம் தெரியாதவர்களை கட்டியணைப்பதை விட, ஒரு தெரப்பிஸ்ட் மூலம் பெறுவதால் அவர்களது நேரம், கவனம், அக்கறையை பணியமர்த்தும் வகையில் இருக்கும்.
முதலில் சிலருக்கு இந்த முறை அருவருப்பை கொடுக்கலாம். ஆனால் இது மிகச்சாதாரணமானது. இதனால் விரைவில் அவர்கள் சவுகரியத்தை உணர்வார்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும், கடந்த மே 2022ல்தான் இதனை வணிகமாக கொண்டு வந்தாலும் இதற்கு பின்னால் உள்ள மனித தொடர்புகளுக்கு பிந்தைய அறிவியல் பற்றி 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆராயத் தொடங்கினார்களாம்.
அதுமட்டுமல்லாது எந்த வேலையும் செய்யாமல் உங்களுக்கு ஒரு மணிநேரம் இருந்தால், அப்போது அக்கறையும், அரவணைப்பும், ஆதரவும், அன்பும் கிடைத்தால் எப்படி உணர்வீர்கள்? எனவும் Trevor Hooton கேள்வி எழுப்பியிருக்கிறார்.