கிண்ணியாவில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அரசுடைமை ஆக்கப்பட்டன
கிண்ணியா கச்சக்கொடு தீவு பகுதியில் சட்டவிரோதமாக பெறப்பட்ட காணிகள் மற்றும் கட்டிடங்கள் 1979 ஆம் ஆண்டு காணி சுவிகரிப்பு சட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி பதிவாளர் பிஸ்கால் ஓடரை வழங்கி காணி மற்றும் சட்டவிரோத கட்டிடங்கள் வெட்கோ இயந்திரம் இட்டு அழிக்கப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டன.
சட்ட விரோத காணி மட்டும் கட்டிடங்களை வைத்திருந்தவர்கள் நிகழ்வின்போது வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர் இருந்தபோதும் நீதிமன்ற தீர்ப்பின்படி பொலிஸாரின் உதவியுடன் கட்டிடங்கள் அகட்டப்பட்டு வருகின்றன.
கட்சக்கொடு தீவில் நீண்ட காலமாக இளைஞர்கள் விளையாடி வந்த மைதானம் ஒன்றும் சட்ட விரோதமாக கைப்பற்றிய வரிடம் இருந்து அரசுடைமை ஆக்கப்பட்டன.
இந்த நிகழ்வு நடைபெறுகின்ற போது பெருமளவான இளைஞர்கள் கூடி நின்றனர். தொடர்ந்தும் இந்த சட்ட விரோத கட்டிட அகட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கட்டிடங்களை அகற்றும் பணி ,கிண்ணியா பிரதேச செயலாளர் எம் .எச் .எம் கனி தலைமையில் நீதிமன்ற பதிவாளர் மற்றும் அதிகாரிகள் பொலிஸார் கிண்ணியா பிரதேச செயலாக காணி உஸ்தியோகத்தர்கள் முன்னிலையில் இடம்பெற்றன.