தவளைகளுக்காக போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்திய இளைஞன்
தவளைகள் வீதி கடப்பதற்காக 40 நிமிடங்கள் வீதி தடை ஏற்படுத்தி இளைஞர் ஒருவர் தவளைகளுக்கு உதவியுள்ளார்.
Ostwald (Bas-Rhin) நகரைச் சேர்ந்த ஒரு இளைஞன், ஸ்ட்ராஸ்பர்க் பிளாக் தெருவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாலையில் சில தவளைகள் காரால் மிதித்துக் கொல்லப்பட்டதைக் கண்டான்.
அதே நேரத்தில், பல தவளைகள் சாலையைக் கடப்பதைக் கண்டார். அதனைத்தொடர்ந்து வீதியில் இறங்கிய இளைஞன் அந்த தவளைகள் சாலையைக் கடக்க உதவியுள்ளார். மேலும் வீதியில் வந்த மற்ற வாகன ஓட்டிகளிடமும் இந்த தகவலைக் கூறி அனைத்து வாகனங்களையும் நிறுத்தியுள்ளார்.
இதனால் சுமார் 40 நிமிடங்கள் வாகன போக்குவரத்துக்கு தடைபட்டுள்ளது.
அதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட தவளைகள் வீதியைக் கடந்தன.
இந்தக் காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.