மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளைஞன் ; தீவிரமாகும் விசாரணைகள்
கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள கைவிடப்பட்ட காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான காரணம்
அவர் கடந்த 30 ஆம் திகதி இரவு வீட்டை விட்டு வெளியேறி இருந்த நிலையில், வீடு திரும்பாத காரணத்தினால் இது குறித்து அவரது சகோதரர்களில் ஒருவர் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சடலம் நீதவான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலைக்கு காரணமான சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.