கொழும்பில் உறங்கிக் கொண்டிருந்த யாசகர் ஒருவரை கொன்ற இளைஞன்..!
ஹோமாகம வைத்தியசாலைக்கு அருகில் உள்ள ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக் கொண்டிருந்த யாசகர் ஒருவரை தீ வைத்து கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் யாசகர் ஒருவரை பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாகவும், அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரியவருகின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாசகர் இன்றையதினம் (30-10-2023) காலை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் 64 வயதுடைய தர்மதாச என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் கலவிலவத்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.