வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! சந்தேகத்தில் பொலிஸார்
மருதங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் வவுனியா, எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இதேவேளை குறித்த வீட்டிற்கு சென்ற அயலவர்கள் இளைஞன் வீட்டில் தூங்கில் தொங்கிய நிலையில் இளைஞன் காணப்படுவதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதனையடுத்து குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், குறித்த இளைஞனின் மரணம் கொலையா, தற்கொலையா என சிதம்பரபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்