தமிழர் பகுதியில் 24 வயது இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சோக சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் காலை (29-10-2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில், சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதான உதயகுமார் உசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் கரம் சுண்டல் விற்பனை செய்யும் வண்டில் ஒன்றினை தயாரித்து, அதற்கு மின்சார வேலைகள் செய்துவிட்டு, மின்சாரம் செலுத்தினார்.
இதன்போது மின்சாரம் அவர்மீது பாய்ந்தது. இந்நிலையில் அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.