இளம் பெண் விமான ஊழியர் செய்த சம்பவம் ; அதிரடி காட்டிய பொலிஸார்
சுமார் 4 கோடி 59 இலட்சத்து 26 ஆயிரத்து 957 ரூபாய் பெறுமதியுடைய தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த ஒரு தனியார் விமான நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

தங்க பிஸ்கட்கள்
குறித்த பெண் அவர் பணியாற்றிய விமானம் ஊடாக இன்று (04) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
தனது பயணப் பைக்குள் 1 கிலோ கிராம் மற்றும் 163 கிராம் எடையுடைய நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள விமான ஊழியர்கள் வெளியேறும் வாயிலிலிருந்து வெளியேற முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை கைது செய்த கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.