விகாரைக்குச் சென்ற பெண் இளம் குடும்ப பெண் மாயம்; கணவர் முறைப்பாடு
களுத்துறை போதி விகாரைக்குச் சென்ற பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணின் கணவர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தரங்கி நிலுஷா என்ற 25 வயது பெண்ணொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
மலசலக்கூடத்துக்குச் சென்ற பெண் மாயம்
காணாமல்போன பெண் கடந்த 22 ஆம் திகதி காலை உறவினர்களுடன் இணைந்து களுத்துறை போதி விகாரைக்குச் சென்றுள்ள நிலையில் அங்கு இவர் தனது 2 வயது குழந்தையை உறவினரொருவரிடம் கொடுத்துவிட்டு மலசலக்கூடத்துக்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்ட நேரமாகியும் மீண்டும் திரும்பி வராததால் உறவினர்கள் அனைவரும் பெணணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது பெண் நீல நிற காற்சட்டையும் வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.