யாழில் செல்லும் வழியில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!
யாழ்ப்பாணத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நோய் அறிகுறிகளுடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் மட்டுவிலை சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது வீட்டில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், குறித்த நபரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, அவசர நோயாளர் காவு வண்டி அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.
எனினும் அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் நோயாளர் காவு வண்டிக்குள் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.