யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்
படிக்கட்டில் தடுக்கி விழுந்து சுயநினைவிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்.கரவெட்டியை சேர்ந்த அனுரா அனுஷாந் (வயது34) என்ற இளம் குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றிய நிலையில், கடந்த 30ம் திகதி எரிபொருள் நிரப்பு நிலையத்திலுள்ள படிக்கட்டில் ஏறியபோது தவறி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார்.
இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
You My Like This Video