இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவால் துயரில் தவிக்கும் உறவுகள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராம்புத் தோட்டத்தில், அலுவலகக் காவலாளி ஒருவர் சனிக்கிழமை (11) மாலை 4 மணியளவில் தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளார்.
“38 வயதுடைய, திருமணமான ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பப் பிரச்சினை
குடும்பப் பிரச்சினை காரணமாகவே அவர் தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளார்.. உடனடியாகக் காப்பாற்றும் நோக்கில் அவர் மீட்கப்பட்டு, மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அவரது உடல் டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.