வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கொடூர கொலையில் சிக்கியஆறு பேர்
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் 30 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இளம் குடும்பஸ்த்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆறுபேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த இரு தினங்களிற்கு முன்பு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் கட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டும் வாளால் தாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தந்தை ,மகன் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைதான சந்தேகநபர்களிடம் இருந்து தாக்குதலிற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் இடியன் துப்பாக்கி மற்றும் வாள்களும் மீட்கப்பட்டன.