சாம்பிராணி தூபம் காட்டும் போது இந்த ஒரு பொருளை சேர்த்தால் பைரவரவரின் பரிபூரண அருள் கிட்டும்
காக்கும் கடவுளான பைரவரவரிடம் பழங்காலத்தில் கோவில்களை மூடிய பிறகு அதன் சாவியை எடுத்துக்கொண்டு போய் பைரவ மூர்த்தியின் சன்னதியில் வைத்து விட்டு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
அவரிடம் ஒப்படைத்த எந்த பொருளும் களவு போகாது என்ற நம்பிக்கை. இன்றளவும் சில கோவில்களில் இது பின்பற்றப்படுகிறது.

பலன்கள்
இந்த பைரவர் மூர்த்தியை நாம் வணங்குவதன் மூலம் நமக்கு திடீரென்று ஏற்படக்கூடிய விபத்துகள் நீங்கும், பொருளாதார இழப்புகள் வராமல் இருக்கும், செய்வினை போன்றவை அகலும், துர் சக்திகள் விலகிவிடும், கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும், தொழிலில் வளர்ச்சி மேம்படும் என்று நிறைய பலன்கள் உள்ளது.
பொதுவாக பெண்கள் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் வீட்டை சுத்தமாக துடைத்துவிட்டு மாலைப்பொழுதோ அல்லது காலையிலோ விளக்கேற்றி, வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்டுவார்கள்.
அவ்வாறு சாம்பிராணி தூபம் காட்டும் போது வெண்கடுகை சாம்பிராணியுடன் சேர்த்து வீடு முழுவதும் காட்டினால் அந்த பைரவரின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும்.

வெண்கடுகு
வெண்கடுகை உபயோகித்து நாம் சாம்பிராணி போட்டு வீடு முழுவதும் காட்டுவதன் மூலமாக நம் குடும்ப பிரச்சனைகள் தீரும், எதிர்மறை ஆற்றல்கள் விலகும், திடீர்விப்பது நீங்கும் இப்படி 9 விதமான பலன்களை நாம் பெற முடியும்.

சாம்பிராணி போட உகந்த நேரம்
வெள்ளிக்கிழமை மாலை நேரம் 5:30 மணியில் இருந்து 6:30 மணிக்குள்ளாக விளக்கேற்றி சாம்பிராணி தூபம் போட வேண்டும்.
அவ்வாறு தூபம் போடும்போது சாம்பிராணி எந்த அளவுக்கு போடுகிறோமோ அதில் கால் பங்கு அளவு வெண்கடுகு போட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும்.
மிகவும் அதிகமாகவும் வெண்கடுகை உபயோகிக்க கூடாது. இந்த சாம்பிராணியை வீட்டில் இருக்கும் நபர்கள் தான் போட வேண்டும்.

வெண்கடுகை எங்கு உபயோகப்படுத்த வேண்டும்
தினந்தோறும் இந்த வெண்கடுகு சாம்பிராணியை உபயோகப்படுத்தக் கூடாது. வீட்டில் பல நல்ல சக்திகளை ஈர்த்து துர் சக்திகளை நாம் வெளியேற்ற வெண்கடுகு சாம்பிராணி உபயோகிப்பது போலவே தொழில் ஸ்தாபனங்களிலும் வெண்கடுகை நாம் பயன்படுத்தலாம்.
நாம் செய்யும் தொழில்களில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுகின்றது அல்லது செய்யும் தொழில் நன்றாக போய்க்கொண்டு இருக்கும் பொழுது திடீரென்று ஏற்ற இரக்கம் ஏற்படுகிறது என்றால் நாம் இந்த வெண்கடுகை உபயோகப்படுத்தலாம்.
சாம்பிராணி போடுவதற்கு பதிலாக நம்முடைய தொழில் ஸ்தாபனத்தை கடைசியாக மூடுவதற்கு முன்பு வெண்கடுகை தொழில் ஸ்தாபனத்தில் தூவி விட்டு, பிறகு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு வர வேண்டும்.

பரிகாரம்
இவ்வாறு செய்வதன் மூலம் அந்த தொழிலில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்களும், பிரச்சனைகளும் விலகிவிடும். இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் தொழிலை நடத்தும் முதலாளி தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
மறுநாள் காலையில் எப்போதும் போல நாம் தொழில் செய்யும் ஸ்தாபனத்தை சுத்தம் செய்துவிட்டு நம்முடைய அன்றாட வேலைகளை தொடங்கலாம்.
இவ்வாறு நாம் வாரத்தில் ஒரு நாள் செய்வதன் மூலம் நம்முடைய குடும்பத்திலும், தொழிலிலும் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் பைரவ மூர்த்தியின் திருவருளால் தீர்ந்துவிடும்.
இந்த எளிய பரிகாரத்தை செய்து பைரவ மூர்த்தியின் ஆசீர்வாதத்தை பரிபூரணமாக பெற்று நலமுடன் வாழலாம்.