உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கா? அப்போ இந்த ஜூஸ்களை ட்ரை பண்ணுங்க
உயர் இரத்த அழுத்தம் என்பது அச்சத்தை ஏற்படுத்தும் தீவிரமான சுகாதார நிலை ஆகும். உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் இரத்தம் தமனிச் சுவர்களுக்கு மிகவும் கடினமான அழுத்தத்தை ஏற்படுத்தும்.
தமனிகளை சேதப்படுத்தும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற மோசமான உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.இன்றைய காலகட்டத்தில் ரத்த அழுத்தம் பாதிப்பினால் ஏற்படும் சிக்கல்கள் அதிகமாகிவிட்டன.
மரபியல், வயது, இனம், வாழ்க்கை முறை மற்றும் பிற மருத்துவக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம்.
ஆனால் ரத்த அழுத்தம் ஏற்பட உண்ணும் உணவு மிக முக்கியமானதாக மாறிவிட்டது. சமச்சீர் உணவு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, உயர் இரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்பையும் குறைக்கிறது.
சில பழங்களின் சாறுகளை வெறும் வயிற்றில் உட்கொள்ளவேண்டும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் பானங்களை முயற்ச்சித்து பாருங்கள். இவை ரத்த அழுத்தத்தை சீர்படுத்துவதுடன் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது காய்கனிச் சாறுகளை முயற்சித்துப் பாருங்கள். இவற்றின் அளவைத் தீர்மானிப்பதற்கு முன் மருத்துவருடன் கலந்தாலோசிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஒரு சிறந்த வழி உடற்பயிற்சி ஆகும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறை இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அதே நேரத்தில் வழக்கமான உடற்பயிற்சி அதைக் குறைக்கிறது. கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் மற்றும் எடையைக் குறைப்பது ஆகியவை உயர் இரத்த அழுத்தத்திற்கான தீர்வுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
பீட்ரூட் சாறு
பீட்ரூட் நைட்ரேக்களின் நல்ல மூலமாகும். இது நைட்ரிக் ஆக்சைடை உருவாக்க உடல் பயன்படுத்துகிறது. நைட்ரிக் ஆக்சைடு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் இரத்த தமனிகளை தளர்த்தவும் உதவுகிறது.
இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். நான்கு வாரங்களுக்கு பீட்ரூட் சாறு உட்கொள்வது உயர் இரத்த அழுத்த அளவீடுகள் குறைகிறது.
தக்காளி சாறு
தக்காளி பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும். இது சோடியத்தின் விளைவுகளை எதிர்ப்பதுடன் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
மிதமான உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் தக்காளி சாற்றை 2 வாரங்கள் குடித்தபோது நல்ல மாற்றம் தெரிந்ததாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
மாதுளை சாறு
வீக்கத்தைக் குறைப்பதற்கும் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மாதுளம்பழத்தில் ஏராளமாக உள்ளன.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளை சாறு அருந்திவந்தால் இரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைகிறது என்று கூறப்படுகிறது.
செம்பருத்தி தேநீர்
இரத்த அழுத்தத்தைக் குறைப்பத்ல் மிகுந்த பயனளிப்பது செம்பருத்தி. மூலிகை பானம் என்று அழைக்கப்படும் செம்பருத்தி தேநீரை தொடர்ந்துஆறு வாரங்களுக்கு ப்ருகிவந்தால் இரத்த அழுத்தம் கணிசமாகக் குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடை நீக்கிய பால்
வெறும் வயிற்றில் பால் குடிப்பது நல்லதல்ல ஆனால் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை வெறும் வயிற்றில் குடிப்பது இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் ஏராளமாக உள்ளன.
நான்கு வாரங்களுக்கு கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உட்கொண்ட பிறகு லேசான உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த அழுத்தம் கணிசமாகக் குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.