இன்று இரவு விண்கல் மழை பொழியும் காட்சியை காணலாம்
தெற்கு டெல்டா அக்வாரி (Southern Delta Aquariids) விண்கல் மழை பொழியும் அற்புதமான காட்சியை இன்று இரவு காணலாம் என வானியல் மற்றும் பொறியியல் பேராசிரியர கிஹான் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் பேராசிரியர கிஹான் வீரசேகர, பூமியிலிருந்து இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான விண்கல் மழை, கும்ப ராசிக்குள் கிழக்கு வானத்தில் சிறப்பாகக் காணப்படும்.
நள்ளிரவு காணலாம்
இரவு 9 மணி முதல் அதிகாலை வரை விண்கற்களைக் காண முடியும் என்றாலும், அவற்றைப் பார்ப்பதற்கு ஏற்ற நேரம் நள்ளிரவு ஆகும். தெளிவான வானத்தின் கீழ் ஒரு மணி நேரத்திற்குள் 15 முதல் 20 விண்கற்களை பார்வையாளர்கள் காணலாம்.

வெய்யிலில் இருந்த கல்லில் 10 வினாடி அமர்ந்த ஆச்சிக்கு நேர்ந்த கதி; அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்!
இந்த நிகழ்வு குறிப்பாக சிறுவர்களுக்கு விண்வெளியில் ஒரு இயற்கை நிகழ்வைக் காணவும், வானியலில் அதிக ஆர்வத்தை வளர்க்கவும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக அமையும்.
மேலும் இந்த காட்சியுடன், சனி கிரகமும் வானத்தின் அதே பகுதியில் தெரியும் என தெரிவித்துள்ளார்.