யோஷித ராஜபக்ஷவின் பாட்டிக்கு வெளிநாடு செல்ல தடை!
யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்வி பொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெய்சிபொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் சந்தேகநபர் என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கியில் காணப்பட்ட59 மில்லியன் ரூபாய்
இந்நிலையில் ,சட்டமாஅதிபரின் உத்தரவின் பேரிலேயே இந்த குற்றசாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்ச டெய்சிபெரெஸ்ட் இருவருடைய பெயரிலும் வங்கியில் காணப்பட்ட59 மில்லியன் ரூபாய் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர்,
இந்த பணம் குறித்த விபரங்களை யோஷித ராஜபக்ச வெளியிடதவறிவிட்டார் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.