கடற்பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடற்படை மற்றும் மீனவத் தரப்பினர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.