ராஜபக்ஷ குடும்பம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யஸ்மின் சூக்கா அம்மையார்!
ராஜபக்க்ஷ குடும்ப உறுப்பினர்கள் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகின்ற முக்கிய பொறுப்புக்களை வகித்ததாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா அம்மையார் தெரிவித்துள்ளார்.
எனவே, தாம் சிங்கப்பூர் சட்ட மா அதிபரிடம் சமர்ப்பித்திருக்கும் குற்றவியல் முறைப்பாட்டில் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு அப்பால் பாரிய ஊழல், மோசடிகள் உள்ளடங்கலாக நாட்டின் தற்போதைய நிலைக்குக் காரணமான பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவைக் கைது செய்யுமாறு வலியறுத்தி சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாட்டு ஆவணம் யஸ்மின் சூக்கா அம்மையாரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அது தொடர்பில் பிரிட்டனைத் தளமாகக் கொண்டியங்கும் வானொலி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே யஸ்மின் சூக்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.