கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள யால தேசிய பூங்கா; வறண்டு போயுள்ள நீர் வளங்கள்
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீரை வழங்கும் நோக்கில், யால தேசிய பூங்காவில் மேலதிக குளங்களை அமைக்கும் நடவடிக்கைகளை வனவிலங்கு திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
பழைய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களும் புனரமைக்கப்பட்டு வருவதாகப் பூங்கா காப்பாளர் ஏ.டி.ஆர். ரவீந்திர தெரிவித்தார். மாணிக் கங்கையிலிருந்து தாங்கிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரப்பப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

காடுகளில் வறண்டு போயுள்ள நீர் வளங்கள்
இதேவேளை, ஒக்கம்பிட்டிய மற்றும் மாளிகாவில வனக்காப்பகங்களில் உள்ள காட்டு யானைக் கூட்டங்கள், குடிநீருக்காக இரவும் பகலும் இலுக்பிட்டிய குளத்திற்கு வந்து செல்கின்றன.
எனினும், அந்த குளம் வறண்டு போயுள்ளதுடன், அதன் நடுப்பகுதியில் சேற்றுக்குளம் ஒன்று மாத்திரமே எஞ்சியுள்ளது.
இன்னிலையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக காடுகளில் உள்ள அனைத்து நீர் வளங்களும் வறண்டு போயுள்ளதோடு, இதனால் வனவிலங்குகளே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.டி.ஆர். ரவீந்திர தெரிவித்தார்.