மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த மாணவியை கெளரவித்த ஞா.ஸ்ரீநேசன் எம்.பி!
இலங்கைத் தேசிய மட்டத்தில் மல்யுத்த அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு வீராங்கனை துதானந்தன் பேமஜானு மாணவியினை இன்று (31-12-2024) நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பாராட்டி கெளரவித்துள்ளார்.
இம் மாணவி 29,30/12/2024 ஆகிய தினங்களில் பண்டாரகம உள்ளக அரங்கில் நடைபெற்ற தேசிய மட்ட மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 53 kg பிரிவில் போட்டியிட்டு 3ம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை வென்று இலங்கை தேசிய மல்யுத்த அணிக்கு தெரிவு செய்யப்பட்டு மட்டக்களப்பு மண்ணுக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கிரான் மத்திய கல்லூரியின் மாணவியான இவ் வீராங்கனை இவ்வாண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை மல்யுத்த போட்டியில் முதலாம் இடம் பெற்று தங்கப்பதக்கத்தையும் வென்ற வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீராங்கனையை இனங் கண்ட கிரான் மத்திய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியருக்கும், இம் மாணவி தேசிய மட்டம் வரை செல்வதற்கு உறுதுணையாக இருந்த பயிற்றுவிப்பாளர் வே.திருச்செல்வம் ஆசிரியருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாணவியின் பெற்றோர்களையும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கெளரவித்துள்ளார்.