2009 இன் பின்னர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான நிலமை!(Video)
இலங்கை தமிழர்கள் என்றாலே கலச்சாரமும் ஒழுக்கமும் கல்வியும் தான் என்பது தான் எமது பெருமையாக அடையாளமாக உள்ளது.
ஆனால் நாட்டில் இடம்பெற்ற போர் முடிந்த பின்னர் தற்போது சமூக கட்டமைப்புக்கள் இன்றி , கலாச்சார சீர்கேடு என்பது எப்படி தோன்றியது? எமது சமூகம் எதை நோக்கி செல்கின்றது என்பது கேள்வியாக உள்ளது.
கணவர் வேறு திருமணம் , மனைவி வேறு திருமணம், இவர்களுக்கு இடையில் தடுமாறும் பிள்ளைகள் என எமது சமூகம் கலாச்சார சீரழிவை நோக்கி சென்றுகொண்டுள்ளமை பெரும் துயர சம்பவமாக உள்ளது. இது இப்படியே தொடர்கதையானால் அடுத்து வரும் சந்ததிகளின் நிலை என்னவாகுமோ என்ற அச்சத்தையும் எம்முள் எழச்செய்கின்றது.
அதுமட்டுமா.... கலாச்சாரத்துடனும் கலைகளுடனும் தலைநிமிர்ந்து வாழ்ந்து வந்த எமது சமூகத்தின் இன்றைய அவலநிலை கண்களில் கண்ணீரை வரவழக்கின்றது.