ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பால் உலகநாடுகள் அதிர்ச்சி!
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் ஊடகமான மெஹர் செய்திச் சேவை இன்று திங்கட்கிழமை (20) உறுதிப்படுத்தியுள்ளமை உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அண்டை நாடான அஜர்பைஜானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு டெக்ரானுக்கு திரும்பும் வழியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்து
நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ஹெலிகொப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் இன்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவு அமைச்சர் உட்பட 9 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரும் பயணித்துள்ளார்.
விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு இப்ராஹிம் ரைசி (63) ஈரான் நாட்டு ஜனாதிபதியாக (Ebrahim Raisi)தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.