விழிப்புடன் இருங்கள் ; இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை
பறவைக் காய்ச்சல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா போன்ற அயல் நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இலங்கையை எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
வைரஸ் மனிதர்களையும் தாக்கும்
பறவைக் காய்ச்சல் இன்ப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது. இது முதலில் பறவைகளை பாதிக்கிறது.
இந்நிலையில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவை அல்லது விலங்குகளுடன் மனிதர்கள் தொடர்புகளை பேணினால் இந்த வைரஸ் மனிதர்களையும் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சமீபத்தில், இன்ப்ளூயன்ஸா ஏ வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுமி இந்தியாவில் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.