உலகப் புகழ்பெற்ற பாடகர் Aloe Blacc இலங்கையில்....
உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் ஆலோ பிளாக் ( Aloe Blacc), இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.
இலங்கையில் சுகாதார துறையில் முதலீட்டுத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோமிக உடுகமசூரியவின் அழைப்பின் பேரில் அவர் ( Aloe Blacc) இலங்கை வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோரால் ( Aloe Blacc) வறவேற்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க பாடகர் ஆலோ பிளாக் ( Aloe Blacc) உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளில் இசை தரவரிசையிலும் அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களிலும் முதலிடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.