உக்ரைனுக்கு அள்ளித்தரும் உலக வங்கி! இவ்வளவு கோடியா?
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.
உக்ரைன் மீது ரஷ்யா இன்றுடன் 14 நாட்களாக தாக்குதலை நடத்தி வருகின்றது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய துருப்புகள் கைப்பற்றி உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். போரை நிறுத்தும்படி அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல்வேறு குடியிருப்புகள், விமான நிலையம், அணுமின் நிலையம் உள்ளிட்டவை மீது சராமரியான தாக்குதலை நடத்தியதில், அங்குள்ள கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டுக்கு சுமார் 723 மில்லியன் டாலர் கடனுதவி வழங்குவதற்கு உலக வங்கியின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது உக்ரைனில் பொருளாதார அவசர நிலையை மீட்பதற்கான நிதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.