21 வயதில் வேலையில் சேர்ந்து 23 வயதில் ஓய்வு பெற்ற இளைஞன்!
ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் (Pavel Stepchenko) தனது 23 வயதில் ஓய்வு பெற்று தனித்துவமான சாதனையைப் படைத்ததன் மூலம் சர்வதேச சாதனை பதிவு நிறுவனத்தில் இடம்பிடித்துள்ளார்.
அவருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் உட்பட ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான சலுகைகளும் கிடைக்கிறது. இதற்கு முன்பு யாரும் இவ்வளவு இளம் வயதில் ஓய்வு பெறவில்லை என்பதால், அவரது பெயர் ரஷ்யாவின் தேசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
2 வருட வேலைக்குப் பிறகு 23 வயதில் ஓய்வு
ஆடிட் சென்ட்ரலின் அறிக்கைப் படி, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்த பாவெல் ஸ்டெப்செங்கோ (Pavel Stepchenko) 2 வருட வேலைக்குப் பிறகு தனது 23 வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.
பாவெல் (Pavel Stepchenko) தனது 16 வயதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். ஐந்து ஆண்டுகள் படிப்பை முடித்த பிறகு, 21 வயதில் ரஷ்ய வெளியுறவுத் துறையில் அவருக்கு வேலை கிடைத்தது.
இதையடுத்து, 2 வருட வேலைக்குப் பிறகு தற்போது தனது ஓய்வையும் அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்பு பாவெல் (Pavel Stepchenko) இரண்டு ஆண்டுகள் ரஷ்ய வெளியுறவுத் துறைக்காக கடுமையாக பணியாற்றி இருக்கிறார்.
இப்போது, ஓய்வூதியம் மற்றும் தொடர்புடைய அனைத்து சலுகைகளும் அவருக்கு கிடைக்கின்றன.
நவம்பர் 2023இல் ஓய்வு பெற விண்ணப்பித்திருந்த பாவெலின் கோரிக்கை சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் (Pavel Stepchenko) சமூக வலைதளங்களில் டிரெண்டான நிலையில் நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.