யாழில் பெண்கள் குழந்தைகள் மீது தாக்குதல்; அதிரடி நடவடிக்கை எடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார்!
யாழ்ப்பாணத்தில், வன்முறை கும்பல் ஒன்று நேற்று இரவு (04) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதன்போது சிறுவர்கள், பெண்கள் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.
சந்தேகநபர் கைது
அந்தவகையில் விரைந்து செயற்பட்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டினை பார்வையிட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரை , அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் ஏனைய ஐவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.