கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடகமாடிய பெண் கைது
அங்கோலா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 237 கிராம் கொக்கைன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான நடத்தை
அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகருக்கு சென்று, அங்கிருந்து கட்டார் நாட்டின் டோஹா வழியாக இலங்கை வந்திருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விமானத்திலிருந்து இறங்கிய பின்னர், அவர் சக்கர நாற்காலியின் உதவியுடன் பயணித்துள்ளார்.
அவரது சந்தேகத்திற்கிடமான நடத்தை குறித்து சுங்க அதிகாரிகளின் கவனம் திரும்பியது.
அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, தம்மிடம் இருந்த 14 கொக்கெய்ன் போதைப்பொருள் உருண்டைகளை அவரே முன்வந்து சுங்க அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.
மேலும், தான் இன்னும் சில போதைப்பொருள் உருண்டைகள் விழுங்கியிருப்பதாக அந்தப் பெண் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.