மட்டக்களப்பில் கடமையாற்றிவிட்டு வீடுதிரும்பிய பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடுதிரும்பிய பெண் ஒருவரை அவரது கழுத்தில் இருந்த 6 அரைப்பவுண் தாலிக் கொடியை இரு சந்தேகநபர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள துறைநீலாவணைக்கு செல்லும் பிரதான வீதியில் வியாழக்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துறைநீலாவனையை வசிப்பிடமாக கொண்ட குறித்த பெண் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் நிலையில் சம்பவதினமான இன்று வியாழக்கிழமை மாலை கடமையை முடித்து தனியாக வீட்டிற்கு மோட்டர்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோது மாலை 5.10 மணியளவில் துறைநீலாவணை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மோட்டர்சைக்கிளில் பயணித்த குறித்த பெண்ணை வழிமறித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து கொள்ளையர்கள் அவரை மோட்டர்சைக்கிளில் இருந்து தள்ளிவிட்டு அவரின் கழுத்தில் இருந்த 6 அரை பவுண் கொண்ட தாலிக் கொடியை அறுத்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சம்பவ இடத்துக்கு சென்ற கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.