தனது அந்தரங்கங்க புகைப்படங்களை விற்று பணமாக்கிய பெண்; இலங்கையில் சம்பவம்
பன்னிப்பிட்டியவை சேர்ந்த திருமணமான பெண்ணொருவர் தனது அந்தரங்கங்க காணொளியை தொழில்நுட்பத்தின் ஊடாக விற்பனை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இக் குற்றச்சாட்டில் கீழ் அப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது அந்தரங்கங்க படங்களை விற்பனை செய்த இளம் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண்
பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது கணவருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்ணின் அந்தரங்கங்க படங்களை இணையத்தில் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
தனியார் வகுப்புகளுக்காக பெற்றோர் கொடுத்த பணத்தை இந்த பெண்ணின் நிர்வாண வீடியோக்களையும் படங்களையும் பார்ப்பதற்கு அந்த மாணவர்கள் செலவு செய்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அப் பெண் கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்தின் கீழ் பணம் பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.