கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றிய பெண் கைது!
CID - Sri Lanka Police
Canada
Crime
By Sulokshi
கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரை பாணந்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மாலம்பே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் கனடாவில் கணக்காளராகக் கடமையாற்றுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார்.
இது தொடர்பில் பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு நான்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகச் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைதான சந்தேக நபர் சுமார் 8 வருடங்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் இவர் மாலம்பே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US