தமிழர் பகுதியில் பேருந்தில் பயணித்த குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
ஹம்பாந்தோட்டையிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் நேற்று மாலை (29) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வவுனியா, இரட்டை இலுப்பைக்குளம், கல்மடு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஆவார்.

உடல்நலக்குறைவு
குறித்த பேருந்து A9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணுக்கு திடீரென கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பேருந்திலிருந்தவர்கள் அவரை மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இறப்புக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் உடலம் மதவாச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.