மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குடும்பப் பெண்
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புன்னைநீராவி பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்ற பொழுது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இந்நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக தெரிவித்துள்ளார்.