அயல் வீட்டுக்கு சென்ற கணவனை துடைப்பத்தால் அடித்துகொன்ற மனைவி; இலங்கையில் பயங்கரம்
ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருவதண்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மனைவியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் நேற்று (24) காலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஹொரணை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெண்ணுடன் இணைந்து தாக்கிய மனைவி
சம்பவத்தில் உயிரிழந்தவர் போருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபராவார்.
உயிரிழந்த நபர் அருகிலுள்ள வீடொன்றுக்குச் சென்று கதவு, ஜன்னல்களைத் தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த வீட்டில் இருந்த பெண் இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவிக்கு அறிவித்துள்ளார்.
ஆத்திரத்துடன் அங்கு வந்த மனைவி, குறித்த பெண்ணுடன் இணைந்து துடைப்பத்தால் கணவனைத் தாக்கியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.