பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகை திருட்டு ; தீவிர விசாரணையில் பொலிஸார்
திருகோணமலை, குச்சவெளி - கும்புறுபிட்டி பகுதியில் இன்று (15.02.2025) பகல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கும்புறுபிட்டியில் உள்ள ஒரு கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து நின்ற கும்பல், கடைக்கார பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை திடீரென பறித்து கொண்டு சென்றுள்ளனர்.
அச்சத்துடன் கூடிய பெண் உடனடியாக உதவிக்காக கூச்சல் விட, அருகிலிருந்தோர் திருட்டு கும்பலை பிடிக்க முயன்றனர்.
எனினும், அவர்கள் வேகமாக ஓடிச் சென்று மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடையில் இருந்த கண்காணிப்பு கமெரா (CCTV) பதிவுகள் சேகரிக்கப்பட்டு, திருடர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும், சந்தேகத்திற்கிடமான நபர்களைப் பற்றி உடனடியாக காவல்துறையை அறிவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.