காணியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த பெண்ணின் சடலம் ; பொலிஸார் தீவிர விசாரணை
அம்பாந்தோட்டை – வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
புஹுல்ஹேன பகுதியில் உள்ள காணியொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண், விதரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.