சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம் ; தடயங்களை அழிக்க அரங்கேறிய செயல் ; இலங்கையில் பயங்கரம்
சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, படுக்கையறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பயணப் பையொன்றுக்குள் பெண் ஒருவரின் சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் சீதுவை, முகலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஆவார்.
உயிரிழந்த பெண் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்கள் கழற்றி அகற்றப்பட்டிருப்பதுடன், தொலைபேசி வயர்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று (21) மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.