யாழில் வருங்கால கணவனின் வீட்டில் களவெடுத்த கிளிநொச்சி யுவதி!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் வருங்கால கணவரின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரியை சேர்ந்த இளைஞரும் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியும் திருமணம் செய்து கொள்ளவிருந்தனர்.

இருவருக்கும் திருமணம்
இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதைத் தொடர்ந்து யுவதி இளைஞனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டிலுள்ள 8 பவுண் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக இளைஞனின் தாயாரால் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.
விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்த யுவதியைக் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் யுவதி இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் நகைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள நகை அடகு நிலையத்தில் விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.