காரால் நாய் மோதிய பெண்ணுக்கு விளக்கமறியல்
பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற காரில் மோதி தெருநாய் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணை டிசம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம நீதவான் ராஜிந்திர ஜெயசூர்ய, இன்று (26) அன்று உத்தரவிட்டுள்ளார்.
நவம்பர் 14 ஆம் திகதியன்று பன்னிப்பிட்டிய வித்யால சந்திப்பில் உள்ள அலுபோகஹவத்த சந்து அருகே வசித்து வந்த இறந்த தெருநாய், சந்தேக நபரான அப்பெண், ஓட்டிச் சென்ற காரில் மோதி இறந்துள்ளது.

வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலை
உள்ளூர்வாசிகள் மற்றும் விலங்கு உரிமை அமைப்புகள் கொட்டாவ காவல்துறையில் அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபரான அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெருநாய் மரணம் வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலை என்று கூறினர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண், பன்னிப்பிட்டிய, கொட்டாவ, தெல்கஹவத்த பகுதியைச் சேர்ந்த இஷானி சில்வா என கூறப்பட்டுகின்றது.