பெண்ணின் தலைமுடியை அறுத்து அரை நிர்வாணமாக ஊர்வலம் ; பொலிஸாரை உறைய வைத்த சம்பவம்
ஜார்கண்ட் மாநிலம், கிரிதிக் மாவட்டம் பிப்ராலி கிராமத்தில் வீட்டு உபயோகப் பொருட்களைத் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில், பெண் ஒருவரை கிராம மக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.
அந்தப் பெண்ணைப் பிடித்து கொடூரமாகத் தாக்கி, அவரது தலைமுடியை வெட்டி, அரை நிர்வாண நிலையில் கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
சுற்றிலும் நின்றவர்கள் இந்த மனிதநேயமற்ற செயலை காணொளியாகப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில் உள்ள மற்றவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.