தனியார் பேருந்து மோதி பெண்ணொருவர் பலி; ஒருவர் வைத்தியசாலையில்
எல்ல பொலிஸ் பிரிவில் பதுளை - பண்டாரவளை வீதியின் ஹல்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (24) இடம்பெற்றுள்ளதுடன் பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியோரம் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பெண் உயிரிழப்பு
விபத்தில் படுகாயமடைந்த பெண்கள் இருவரும் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பண்டாரவளை, ஹல்பே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஆவார்.
சடலம் தெமோதர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.