எரிவாயு அடுப்பு வெடித்ததில் பீதியடைந்த பெண் மேற்கொண்ட விபரீத செயல்!
இலங்கையில் நாளுக்கு நாள் ஏரிவாயு சிலிண்டர்கள் மற்றும் எரிவாயு அடுப்புகள் வெடிக்கும் சம்பவம் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் குருவிட்ட – பதுஹேன பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்ததில் பயத்தில் யுவதி ஒருவர் வீட்டில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தினால் மாடியில் இருந்து குதித்த யுவதிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், மொனராகலையைச் சேர்ந்த குறித்த யுவதி, பதுஹேன பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.