சொகுசு பேருந்து - லொறி விபத்தில் பெண் காயம்
நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று (06) காலை 11 மணியளவில் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் பிளாக்ஃபுல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பேருந்து மீது எதிர் திசையில், நுவரெலியாவில் இருந்து பிளாக்பூல் நோக்கி பயணித்த லொறி பிரதான வீதியின் குறுக்கே கவனக்குறைவாக திருப்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பேருந்தும் லொறியும் சேதமடைந்துள்ள நிலையில் , விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.