அவுஸ்திரேலிய யுவதியின் கழுத்தை நெரித்த தனுஷ்க? அடுக்கடுக்காக சுமத்தப்பட்ட பகீர் குற்றச்சாட்டுகள்!
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலிய யுவதியின் கழுத்தை நெரித்து மூச்சு திணறச் செய்ததால், பாதிக்கப்பட்ட யுவதியின் மூளை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சிட்னி நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா- சிட்னியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தியதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹோட்டலில் வைத்து தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான பொலிஸாரின் அறிக்கையை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
டேட்டிங் அப்
பெண் மீது குணதிலக்க பல தடவைகள் தனது உடலை பலவந்தமாக திணித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அப்பெண் தனது உயிர் குறித்து அஞ்சும் அளவுக்கு அவர் மூச்சுத் திணறச் செய்யப்பட்டார். மறுநாள் அவர் உளவள ஆலோசனை சேவைத் துறையினரை தொடர்புகொண்டார். அப்பெண்ணால் அழுகையை நிறுத்த முடியாமல் இருந்ததாகவும் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 29 ஆம் திகதி டேட்டிங் அப் ஒன்றின் மூலமாக இப்பெண்ணை தனுஷ்க குணதிலக்க தொடர்புகொண்டார். அதையடுத்த நாட்களில் அவர்கள் எழுத்து மற்றும் வீடியோ மூலமாக உரையாடினர். தன்னை சந்திப்பதற்கு பிரிஸ்பேன் நகருக்கு வருமாறு அப்பெண்ணிடம் குணதிலக்க கோரினார். அதற்கு அப்பெண் மறுத்தார்.
எனினும், நவம்பர் 2 ஆம் திகதி சிட்னியில் ஒபாரா பாரில் நேரில் சந்திப்பதற்கு இருவரும் இணங்கினர். அதன் பின்னர் அவர்கள் ஹண்டர் வீதியிலுள்ள பீட்ஸா விடுதியொன்றுக்கு சென்றனர். அதன்பின் அப்பெண்ணின் வீட்டுக்குப் படகுமூலம் செல்வதற்கு சேர்கியூலர் கீ துறைமுகத்துக்கு சென்றனர்.
பலவந்தமாக உறவு
இந்த ஜோடியினர் பல தடவைகள் மதுபானம் அருந்தியதாக கூறப்படுகின்றபோதும், தாங்கள் அல்கஹோலினால் பாதிக்கப்படவில்லை என அப்பெண் நம்புகிறார். அத்துடன் படகுச் சவாரியின்போது, அப்பெண் மீது குணதிலக்க தனது உடலை அழுத்தியதுடன் பலவந்தமாக முத்தமிட்டார்.
அப்பெண்ணின் வீட்டுக்கு இவர்கள் இருவரும் வந்த பின்னர், குணதிலக்க பலவந்தமாக உறவுகொண்டதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணுறை அணிந்துகொள்ளுமாறு குணதிலக்கவை தான் கோரியபோதிலும், மேற்படி பாலியல் தாக்குதல்களின்போது, தனது படுக்கைக்கு அருகில் தரையில் ஆணுறை கிடந்ததை தான் கண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிகெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்ததையடுத்து அவர் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.