கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த பெண் கொலை; தப்பியோடிய இருவர்
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் ஒரு பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயே சம்பவத்தில் கொல்லபப்ட்டுள்ளார்.
குறித்த பெண் மூன்று மாதங்களுக்கு முன்பு தனது கணவரிடமிருந்து பிரிந்து அவரது வீட்டில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (3) இரவு தனது வீட்டின் முன் தொலைபேசி அழைப்பை எடுத்துக்கொண்டிருந்தபோது, இரண்டு பேர் அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
குறித்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் ராஜாங்கனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.